தஞ்சாவூர், ஆகஸ்ட் 4:
நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டார்.
இதற்கிடையே, நலத்திட்டங்களில் கீழ் பயனாளிகளுக்காக புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிலருக்கு நேரிலே குடும்ப அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ. தியாகராஜன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்