Wed. Jan 14th, 2026

தஞ்சாவூர் – ஆகஸ்ட் 4

தஞ்சாவூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்த திரு. பாஸ்கர் என்பவர், தனது மகளை இரண்டாம் வகுப்பிற்கு சேர்க்க கோரிய மனுவை மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களிடம் சமர்ப்பித்தார்.

அரசர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க விரும்பிய பாஸ்கருக்கு, அந்த பள்ளியில் இடம் இல்லாததால், மாவட்ட ஆட்சியர் மனிதநேயத்துடன், அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுமியை சேர்க்க பரிந்துரை செய்தார்.

மக்கள் நலத்தையும், பள்ளி கல்விக்கான அடிப்படை உரிமையையும் முன்னிலைப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு, CITU (சென்டரல் இந்தியன் தொழிலாளர் சங்கம்) சார்பில் நன்றியுடன் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

✍️ இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர் – தஞ்சாவூர்


By TN NEWS