Tue. Aug 26th, 2025

குடியாத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், பேர்ணாம்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் சி. முத்துவேல், குடியாத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் காயத்ரி மற்றும் FSSAI அங்கீகரித்த பயிற்சியாளர் மதுமிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாநில ICDS (Integrated Child Development Services) திட்டத்தின்கீழ் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான FOSTAC (Food Safety Training and Certification) பயிற்சி நிகழ்வு இன்று குடியாத்தத்தில் நடைபெற்றது.

பயிற்சியின் போது தனிநபர் சுத்தம், பணியிட சுத்தம், உணவு பொருட்களின் தரம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இம்முகாமில் 40 ICDS பணியாளர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி முடிவில், கலந்து கொண்ட அனைவருக்கும் FOSTAC சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது, அங்கன்வாடி பணியாளர்கள் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட உதவும் என நிகழ்வில் பேசினோர் தெரிவித்தனர்.

— குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன் ✔️

 

By TN NEWS