சாமாண்டஅள்ளி பள்ளியில் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி” சிறப்பாக நடைபெற்றது.
வீடுதோறும் ஒரு மரக்கன்றை நடும் நோக்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வேம்பு, புங்கமரம், துளசி, பப்பாளி, பூவரசம், சீதா, காட்டு நெல்லி உள்ளிட்ட பல்வேறு செடிகளை நடினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் திருமதி பெ. சாரதா, உதவி ஆசிரியர்கள் ர. கோவிந்தராஜ், சா. சிவராஜ், சி. உஷாராணி, சூ. சு. சரண்யா, மு. பூமதி ஆகியோர் மாணவர்களுக்கு ஒவ்வொரு செடியின் பயன்களை விளக்கிக் கூறினர்.
துப்புரவு பணியாளர் திரு. குமரன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
பசுபதி – தலைமை செய்தியாளர்.