Tue. Aug 26th, 2025


1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 30.07.2025-ம் தேதி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நசீர் (34) என்ற நபரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சுமார் 2 கிலோ கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


2. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் அருகே 30.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ராதா(45) என்ற நபரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 1.250 கி.கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


3. பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமார்(52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தல் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது.இது தொடர்பாக இன்று மேற்கண்ட பிடியாணையை நிறைவேற்றும் பொருட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரி ஜெயக்குமார்(52) என்பவரின் இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கபட்டார்.


4. சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது.
i. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 30.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் வீரபாண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சரவணன்(42) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ii. திருப்பூர் மாநகரம்,  திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 30.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது பிரகாஷ்(49) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம்.

By TN NEWS