Tue. Aug 26th, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் – மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கல்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான  உயர்கல்வி சேர்க்கையை எளிதாக்கும் நோக்கில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாணவர்கள் தொழிற்கல்வி மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கான நேரடி சேர்க்கை ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு. இ. மாதவன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

— இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர் மாவட்டம்

 

By TN NEWS