Tue. Aug 26th, 2025


ஒன்றிய அலுவலகம் முன் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலை 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் எம். கார்த்திகா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்ட விளக்குரையை முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் துரைசெல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சி. பிரேம் குமார் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் எஸ். மகேஷ்பாபு, நா. பரமசிவம், ஜி. தங்கவேல், டி. மணியரசன், அக்பர், ஜி. முனுசாமி, என். ஜீவரத்தினம், ஸ்ரீ திருநாவுக்கரசு, வி. சற்குணம், பிரியதர்ஷினி, மலர்கொடி, ஆர். செல்வி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS