Tue. Jul 22nd, 2025

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.*

*மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்*

*குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அடுத்த முறை நடைபெறும் கூட்டத்தின் போது நடவடிக்கை குறித்து மின் வாரிய அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். மனுக்கள் மீது கள விசாரணை நடத்த காலதாமதம் செய்யக் கூடாது.*

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் சாலையிலுள்ள அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட பொது செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி அவர்கள் ,  உதவி செயற் பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர், அதிகாரிகள் மற்றும் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன், K.A.K. கிருஷ்ணசாமி மற்றும் பொது மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனு விபரம்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி கோட்ட பகுதிகளிலுள்ள மின்துறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக மாதாந்திர மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் அளிக்கப்படுகின்ற புகார் மனுக்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிக்காமல் காலம் கடத்தி தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமாக செயலாகும் என்பதால் யார் எந்த அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விரைவாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

           இது போன்று சிலர் செய்யும் தவறான செயலால் இரவு பகலாக பாடும் மின்சார வாரிய அதிகாரிகள்  அலுவலர்கள், ஊழியர்களுக்கு தேவையில்லாத வீணான அவப்பெயர் ஏற்படுவதோடு அரசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகின்றது.

               மேலும் அரசு துறைகளில் புகார் மனு அளிக்கப்பட்டால் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விபரங்களை முழுமையாக படித்து பார்த்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை மனுதாரருக்கு 30 தினங்களுக்குள் வழங்க வேண்டுமென்ற விதிகள் உள்ளன.

             குறை தீர்ப்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் கீழ்நிலை அலுவலர்கள் முதல் பலரும் பணியை முறையாக மேற்கொள்வதில்லை. இதனால், மனு அளித்தவர்கள் அலையும் நிலை ஏற்படுகிறது.

         எனவே இனிவரும் காலங்களில் அவிநாசி பகுதிகளில் நடைபெறும் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அளிக்கப்படும் அனைத்து மனுக்களின் மீது காலதாமதமின்றி உடனுக்குடன் உரிய தீர்வு கண்டு சம்பந்தப்பட்ட குறைதீர்ப்பு தலைவர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வாயிலாக கடிதம் அளிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

சரவணக்குமார்.

By TN NEWS