Tue. Jul 22nd, 2025

பாம்பன், ஏப்ரல் 6:
பாம்பன் ரயில்வழிப் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014 ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் APJ அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது கைகளால் திறந்து வைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவு கல்வெட்டு, பின்னர் பாம்பன் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் சமீபத்தில் முடிந்துள்ளன. ரயில்வே பாலம் திறப்பு விழா நடைபெற உள்ள சூழலில், அந்த நினைவு கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றை மறைக்கும் செயலாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

“இந்த கல்வெட்டு, பாம்பன் பாலத்தின் பெருமைக்குரிய சின்னமாகும். அதனை மீண்டும் நிறுவ வேண்டும். இது அப்துல் கலாம் ஐயாவின் பாரம்பரியத்தையும், பாம்பனின் வரலாறையும் காப்பது தான்,” என சமூக செயற்பாட்டாளர் திரு M.S. சிக்கந்தர் தெரிவித்தார்.

இது குறித்து புகழ்பெற்ற அறிஞர்கள், கலாசார ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். “மக்களை போராடத் தூண்டாதீர்கள்; உடனடியாக கல்வெட்டினை மீண்டும் நிறுவ வேண்டும்,” எனக் கூறி, விரைவான நடவடிக்கையை கோரியுள்ளனர்.

மு.சேக்முகைதீன்.

By TN NEWS