திருப்பூர், மார்ச் 28:
பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலைபாளையம் KNS Garden பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பல்லடம் காவல்துறை ஆய்வாளர் திரு. மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
890 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கார் கைப்பற்று
அந்த இடத்தில் TN 04 AA 6979 என்ற Hyundai Verna கார் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்த போலீசார் சோதனை நடத்தினர். இதில், 890 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகண்ணன் (37), தந்தை பெயர்: வீருகாத்தான் என்பவரை கைது செய்து, கார் மற்றும் குட்கா பொருட்களை கைப்பற்றினர்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
பல்லடம் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.