Tue. Jan 13th, 2026

உசிலம்பட்டி 28.03.2025

*உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.,*

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் அவரது பிறந்த நாளான கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் ஏற்பாட்டில் கூலி தொழிலாளர்கள் என சுமார் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.,

இவ் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS