நாகர்கோவில், மார்ச் 21:
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S. அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டது.
இதில், வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சிறுவனின் பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக மோட்டார் வாகனச் சட்டம் 199A பிரிவின் கீழ் “Juvenile Driving Case” பதியப்பட்டுள்ளது.
19 பெற்றோருக்கு வழக்கு – வாகன பதிவு ரத்து பரிந்துரை.
🚨 ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
🚨 வழக்குகள் JM II நடுவர் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட உள்ளன.
🚨 வாகனங்களின் பதிவு ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனைகள்:
1️⃣ ரூ.25,000 அபராதம்
2️⃣ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை
3️⃣ ஒரு வருடம் வாகன பதிவு ரத்து – வாகனங்களை மீண்டும் வழங்க முடியாது
4️⃣ சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை
பள்ளி விடுமுறையை முன்னிட்டு காவல்துறையின் எச்சரிக்கை.
சிறார்களின் வாகன ஓட்டத்தால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் இருசக்கர வாகனங்களை இயக்காதவாறு கவனமாக இருக்குமாறு நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
— நமது செய்தியாளர்
சரவணகுமார் – திருப்பூர் மாவட்டம்