திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கால்நடை வைத்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக கால்நடை உணவு ஏதும் உட்கொள்ளாமலும் அவதிப்பட்டு வந்த நிலையில்.
உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனை மேல் செங்கம் மருத்துவர் கலந்தர் அவர்களிடம் சென்றுள்ளார் மேலும் கால்நடையை காண்பித்து வயிற்றில் பெரிதாக உள்ளது இதனால் சில நாட்களாக தீவனங்கள் ஏதும் உட்கொள்ளவில்லை மேலும் ஐந்து மாத சினையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அறிந்த கால்நடை மருத்துவர் கலந்தர் அவர்கள் மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனரிடம் தகவல் கொடுத்துள்ளார் அவர்கள் கூறிய அறிவுறுத்தலின்படி.
மாட்டிற்கு மைக்க ஊசி செலுத்தி அந்த கட்டி உள்ள இடத்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி 3.900 கிலோகிராம் கட்டியை கால்நடை மருத்துவர் அகற்றினார்.
உடன் கால்நடை ஆய்வாளர் மங்கை இருந்தார்.
மேலும் கால்நடை உரிமையாளர் மணிகண்டன் என்பவர் நீண்ட நேரத்திற்கு பிறகு போராடி தனது பசுவினை அறுவை சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதனால் அப்பகுதி மக்கள் மேல்சங்கம் கால்நடை மருத்துவரை பாராட்டி வருகின்றனர்.
ஒரு அரசு மருத்துவர் துரித நடவடிக்கை எடுத்து கால்நடையின் உயிரைக் காப்பாற்றி வந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அச்சுதன்
மாவட்ட தலைமை நிருபர் திருவண்ணாமலை.