Tue. Jul 22nd, 2025



மதுரை, பிப். 21: தமிழக அரசு வழங்கிய ரூ. 3 ஊக்கத்தொகை, கிராம பால் கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, பின்னர் பழைய நடைமுறையை பின்பற்றி பால் உற்பத்தியாளர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆவின் நிர்வாகம் ஏற்காததால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து பிப். 24 அன்று பால் நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக மதுரை மாவட்ட கூட்டு போராட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், மதுரை ஆவின் பொது மேலாளர் தலைமையில், கிராம பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடனும் பால் உற்பத்தியாளர்களுடனும் ஆலோசனை நடைபெற்றது. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படாததால், போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பால் விநியோகத்தில் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS