ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை ஐடி உள்ளது. பொதுவாக இந்த ஐடிகளில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சில சமயங்களில் சிறப்பு எழுத்துக்கள் (எடுத்துக்காட்டாக, @ #,$, %, &,*) கூட இருக்கலாம். இந்த சிறப்பு எழுத்துகள் கொண்ட ஐடிகள் பிப்ரவரி 1 முதல் UPI அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப விவரக் குறிப்புகளைப் பின்பற்றி NPCI இந்த முடிவை எடுத்துள்ளதாக . UPI transactions will not work from February 1UPI பரிவர்த்தனை ஐடி விதி மாற்றம் சிறப்பு எழுத்துக்கள் கொண்ட ஐடிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல் நிராகரிக்கப்படும்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்க்கப்படாது என தெரிவித்துள்ளது. எண்ணெழுத்து மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி மூலம் மட்டுமே பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த விதியை பின் பற்றாதவர்களின் ஐடிக்கள் பிளாக் செய்யப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது A-Z மற்றும் az இடையே உள்ள எழுத்துக்களையும் 0-9 க்கு இடைப்பட்ட எண்களையும் பயன்படுத்தி பயனர்கள் ஐடிகளை உருவாக்க முடியும். @ # % மற்றும் $ போன்ற சிறப்பு எழுத்துகளைக் கொண்ட ஐடிகள் கொண்ட பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.