உசிலம்பட்டி 10.01.2025
*உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.,*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.,
இன்று இப்பள்ளியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வட்டார கல்வி அலுவலர் தேவி, தலைமையாசிரியர் மதன்பிரபு முன்னிலையில் நடைபெற்றது.,
முன்னதாக பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது, தொடர்ந்து இயற்கை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்ட உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் பள்ளி பரிபாலன சபை சங்க செயலாளர் எஸ்.எம்.எஸ்.ஆர். நடராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயராமன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.,
800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஒன்றாக இணைந்து கோரஸ்-ஆக பொங்கல் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.
