வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தின் உலகப் பிரசித்தி பெற்ற வைகாசி திருவிழா இந்தாண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14.05.2026 அன்று தேர் திருவிழாவும், 15.05.2026 அன்று சிரசு திருவிழாவும் நடைபெற்ற நிலையில், 17.05.2026 அன்று புஷ்பப் பல்லக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் புஷ்பப் பல்லக்குத் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் பக்தி உணர்வுடன் அளித்த காணிக்கைகள் (உண்டியல் தொகை) இன்று (25.05.2026) கணக்கிடும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில், பக்தர்கள் வழங்கிய மொத்த உண்டியல் காணிக்கைத் தொகை ரூ. 10,99,537/- (பத்து லட்சத்துத் தொண்ணூற்று ஒன்பதாயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு ரூபாய்) என உறுதி செய்யப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் தமிழ்நாடு அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகுமார், ஆலய நிர்வாகிகள் ஆர்.ஜி. சம்பத், ஆர்.ஜி. கார்த்திக் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்ததற்கு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம்.
