Thu. May 21st, 2026

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி | மே 20:
உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் எம்.பி.ஆர். காம்ளஸில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

🐝 விழாவின் நோக்கம்:

தேனீக்கள் பூக்களில் அமர்ந்து மகரந்தச் சேர்க்கை செய்வதால்தான் நமக்குக் காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவுகள் கிடைக்கின்றன. “சிறிய பூச்சி, பெரிய உழைப்பு” என்பதை வலியுறுத்தும் வகையில், பூச்சி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், தேனீக்களைப் பாதுகாப்போம் – உலகைக் காப்போம் என்றும் இவ்விழாவில் உறுதியேற்கப்பட்டது.

“தேனீக்கள் அழிந்தால்… மனித இனம் முடிவடைந்தது!” – என விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமித்துக் கருத்து தெரிவித்தனர்.

📍 விழாவின் சிறப்பம்சங்கள்:

· வரவேற்பு: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
· தலைமை உரை: அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ப. முருகவேல் தலைமையேற்றுக் கருத்துரை வழங்கினார்.
· முன்னிலை வகிப்பு: சமூக ஆர்வலரும், அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளருமான அகலூர் அ. ஜோலாதாஸ் (LIC முகவர்) மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் கமலா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து முன்னிலை வகித்தனர்.
· சிறப்பு விருந்தினர்கள்:
· நா. அறவாழி (தமிழ்நாடு நீர்நிலை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குநர், பாரத் மித்ரன் அறக்கட்டளை மாவட்ட பொதுச்செயலாளர்)
· ரமேஷ்பாபு (கன்னிகா சாரிடபுள் நிறுவனர்)

🆔 தொழிலாளர்களுக்கு அரசு நல அட்டை வழங்கல்:

இந்நிகழ்வில், பாரத் மித்ரன் அறக்கட்டளை சார்பில் பதிவு செய்யப்பட்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு அரசு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

💼 LIC முகவர் சிறப்பு உரை:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) முகவர் அ. ஜோலாதாஸ் மக்களுக்கு பயன்பெறும் பாலிசிகளின் விவரங்களை எளிமையாக விளக்கிப் பேசினார்.

🍯 பங்கேற்பு மற்றும் இனிப்பு வழங்கல்:

இவ்விழாவில் 50-க்கும் மேற்பட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

🙏 நன்றியுரை:

விழாவின் இறுதியில், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பர்வீன் நன்றி கூறினார்.

✍️ செய்தியாளர்:
சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS