வேலூர், மே 21: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கவியரசு அவர்களின் மகன் ஆகாஷ் ஆபிரகாம் (வயது 18), என்பவர் கடந்த 19.05.2026 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் விஷ மருந்து அருந்தியுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர், சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் (20.05.2026) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.
விசாரணையில், இறந்தவர் ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்ததும், அவரது தந்தை கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: கே. வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா நிருபர்.
குறிப்பு: இந்த செய்தி வேறு எங்கும் பதிவானதாக தகவல் இல்லை. செய்தியாளர் தந்த செய்தியின் அடிப்படையில் இந்த செய்தியை பதிவு செய்யப்பட்டுள்ளது.
