Wed. May 20th, 2026

மே 19

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து திமுக சார்பில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திமுகவின் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக கட்சி தலைமையால் குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு எழும்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கே.வி.குப்பம் தொகுதியில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை குழுவினரிடம் பதிவு செய்து கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான கதிர்ஆனந்த், கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் ராஜேஸ்வரி, குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியானந்தம், ஒன்றிய செயலாளர்கள் நத்தம் பிரதீஷ், அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா.

By TN NEWS