Sun. May 17th, 2026

குடியாத்தம், மே 16: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில், கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 15-வது மத்திய நிதிக் குழு மானியம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து, சுமார் ரூபாய் 16,55,000 மதிப்பீட்டில் ஒரு அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு, இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள மழலைக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், “எப்போது இந்த அங்கன்வாடி மையம் திறக்கப்படும்?” என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை: இந்த அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்

By TN NEWS