Sun. May 17th, 2026

சென்னை, மே 16: பதவியேற்று ஒரு வாரமாகியும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாததால், தலைமைச் செயலகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் கையொப்பத்திற்காக காத்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று (மே 16) அமைச்சர்களுக்கான இலாகாக்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமைச்சரவை உறுப்பினர்களுக்கான இலாகா ஒதுக்கீடு விவரம்:

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்:
பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் & குழந்தைகள் நலன், இளைஞர் நலன், முதியோர் & மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல்

அமைச்சர்களின் முழு பட்டியலும் பின்வருமாறு:

· என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்): ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் & ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு, ஊரகக் கடன் சுமை ஒழிப்பு, பாசனம் & சிறு பாசனம்

· ஆதவ் அர்ஜுனா: பொதுப்பணித்துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் & சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு

· கே.ஜி.அருண்ராஜ்: மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி, குடும்ப நலன்

· கே.ஏ.செங்கோட்டையன்: நிதித்துறை
· வெங்கடரமணன்: கல்வி
· சி.டி.நிர்மல்குமார்: தொழில்
· ராஜ்மோகன்: உணவு
· டாக்டர் டி.கே.பிரபு: கனிம வளங்கள் & சுரங்கம்
· கீர்த்தனா: மீன்வளம்

இதன்மூலம், பத்திரங்கள் மற்றும் கோப்புகளுக்கான கையொப்பச் சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

V. ஜெய்சங்கர்

மக்கள் தொடர்பு அதிகாரி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்..

By TN NEWS