Sun. May 17th, 2026

கும்பகோணம், மே 16: இந்தியா முழுமையும் நீட் (NEET) தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வரவேற்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தோர்:

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழக மாநகர தலைவர் திக. க. சரவணகுமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திக. கு. நிம்மதி அவர்கள் முன்னிலை வகித்தார்.

கண்டன உரை மற்றும் சிறப்புரை:

கண்டன உரையை தலைமை திக. அன்பழகன் அவர்கர்கள் வழங்கினார். தொடர்ந்து, தஞ்சை (மேற்கு) மாவட்ட திமுக பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மற்றும் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

· சு. ப. தமிழழகன் – மாநகரச் செயலாளர்
· சிபிஐ மு. அ. பாரதி – மாவட்டச் செயலாளர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
· சரவணன் – மாவட்டச் செயலாளர் (மதிமுக)
· சின்னைப் பாண்டியன் – மண்டலச் செயலாளர் (சிபிஎம்)
· வழக்கறிஞர் சா. விவேகானந்தன் – விசிக

மேலும் பல்வேறு திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரிவாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முக்கியக் கோரிக்கை:

நீட் தேர்வு கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் ஒரு பாகுபாடான தேர்வு என ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுமையும் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மருத்துவக் கல்வியில் மாநில அரசின் உரிமையை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்:
கோ. வளங்கோவன்
கும்பகோணம்

By TN NEWS