தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இப்போது ஒரு புதிய அலை ஓடுகிறது. ‘சோம்பேறித்தனம்’ என்ற பெயரே இல்லாமல், அதிகாரிகள் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவரை இருந்த பல முதலமைச்சர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து இருந்து பணிகளைக் கண்காணித்ததில்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் உத்தரவுகளைச் செயலர்கள் மூலம் அனுப்பிவிட்டு, ஒரு அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே அலுவலகத்தில் செலவழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டின் 12வது முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் இந்தப் போக்கை முற்றிலுமாக மாற்றியுள்ளார். அவர் ஒரு திறமையான மேலாளரைப் போல, காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணிகள் உடனுக்குடன் முடிகிறதா, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகளே பாராட்டுகிறார்கள். இதனால், அதிகாரிகள் மத்தியில் பொறுப்புணர்வும் அவசர உணர்வும் ஏற்பட்டு, “இனி சோம்பேறித்தனமாக இருக்க முடியாது” என்ற மனநிலை உருவாகியுள்ளது.
தற்போது, முதலமைச்சர் விஜய் காலை 9.45 மணிக்கே செயலகத்தை வந்தடைந்து, மாலை 4 மணி வரை பணிகளைக் கவனித்து வருவதாகவும், தனது மதிய உணவை வீட்டிலிருந்தே எடுத்து வந்து அலுவலகத்திலேயே உட்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த எளிமையான வாழ்க்கை முறை, பணியாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனையில், “உங்களின் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் ஊதியமும் தர முயற்சிக்கிறேன்; ஆனால், எந்தச் சூழலிலும் லஞ்சத்திற்கு இடமளிக்கக் கூடாது” என்று அவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். இந்த நோக்கில்தான், சமீபத்தில் அகவிலைப்படியில் 2% உயர்வு வழங்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். “ஜீரோ கரப்சன்” இலக்கை அடைய, மூன்று மாதங்களில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், முன்னறிவிப்பின்றி (Silent Visit) அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று திடீர் ஆய்வுகள் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளால், “சட்டத்தின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் விஜய் செயல்முறையிலேயே காட்டி வருகிறார்” என்பதும், “ஒரு ஒழுங்கான ஆட்சியை மக்கள் விரைவில் காணப் போகிறார்கள்” என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
வி. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே