Fri. May 15th, 2026

விழுப்புரம் மாவட்டம், மே 14: உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், வல்லம் கிராமத்தில் விவசாயிகள் வேலை செய்யும் நிலத்தில் இன்று (14.5.2026) சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில், வல்லம் பகுதியில் உள்ள 70 ஏக்கர் விவசாய நிலத்துக்கு உழவு இயந்திரங்கள் செல்ல பாதை வசதி இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

விழாவின் அமைப்பு.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வல்லம் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து, வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நா. அறவாழி தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏழுமலை, இயற்கை விவசாயி முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வுகள்.

பாரத்மித்ரன் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அகலூர் அ. ஜோலாதாஸ், வேளாண்மை வல்லம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

மேலும், பல்வேறு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்த்துரை வழங்கினர்:

· வல்லம் வேளாண்மை உதவி விதை அலுவலர்: இரா. விஜயலட்சுமி
· உதவி வேளாண்மை அலுவலர்கள்: ச. ஹரிதாஸ், பூ. ஜீவா, ஏ. அபிராமி, ரா. தமிழரசி, ஏ. மீனாட்சி
· உதவி தொழில் நுட்ப மேலாளர்: ச. பாலாஜி
· தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (கிழக்கு மாவட்ட துணை செயலாளர்): கோ. முருகன்
· மகளிரணி விவசாயிகள்: சித்திரா, விஜயா, லட்சுமி, வனிதா

விவசாயிகளின் முக்கிய கோரிக்கை…!

விழாவில் விவசாயிகள் எழுப்பிய மிக முக்கிய கோரிக்கையாக, “வல்லம் கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் பாதைக்கு அருகில் சுமார் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களைச் சாகுபடி செய்வதற்கு நவீன உழவுக் கருவிகள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்கான பாதை எதுவும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

அந்தப் பகுதியின் வழியாகச் செல்லும் ஓடையின் இரு பக்கங்களிலும் விவசாய நிலங்கள் உள்ளன. ஆகவே, அந்த ஓடையின் இரு கரைகளிலும் பாதை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”

இச்செய்தியைப் பார்க்கும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

நன்றியுரை.

நம்ம ஊர் விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கம்மந்தூர் இளையராஜா நன்றி கூறினார். விழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.

செய்தியாளர்: சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு டுடே

By TN NEWS