Thu. May 14th, 2026

கோவை, மே 14:

தமிழக முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் விக்கி நாதன் வெற்றிவேல் பண்டிட் நியமிக்கப்பட்டதை விமர்சித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சட்டசபையில் பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், வன்னியரசு அவர்கள் ஜோதிடக் கலையையும் ஜோதிடர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தனது கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு மன்னிப்பு கோராத பட்சத்தில், தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்க நிர்வாகக்குழு கூடி, அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் நிறைமதி அவர்களிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS