Thu. Apr 30th, 2026

நெல்லை, ஏப்ரல் 26:

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில், உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவரை, ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தன்னுடைய விழிப்புணர்வு மற்றும் மனிதநேயத்தால் காப்பாற்றிய சம்பவம் பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.

தகவலின்படி, மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைக் கவனித்த ரயில்வே ‘கீ-மேன்’ ஆக பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் உடனடியாக அங்கு சென்று, முதியவரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் அவரிடம் அமைதியாக பேசி ஆறுதல் கூறிய அவர், அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் முதியவரை அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக முதியவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ரயில்வே ஊழியரின் மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


செய்தியாளர்: ஜெ. அமல்ராஜ், தென்காசி

By TN NEWS