சங்கரன்கோவில், மே 16: நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சங்கரன்கோவில் தொகுதி, என்ஜிஓ காலனி பகுதியிலுள்ள பூத் எண் 5-ல் ஒரு தரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடிகர் விஜய்யின் ‘சர்க்கார்’ படக்காட்சியை நினைவூட்டும் வகையில், ஒரு பெண்ணின் வாக்கு ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாகக் கூற, பின்னர் பலத்த போராட்டத்திற்குப் பின் ‘சல்லெஞ்ச் வோட்’ (Challange Vote) போடும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு அதிர்ச்சி…!
தனது வாக்கைச் செலுத்த வந்த அப்பெண்ணிடம், அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், “உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுவிட்டது. நீங்கள் திரும்பிச் செல்லலாம்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், “நான் இப்போதுதான் வருகிறேன். இதுவரை ஓட்டு போடவில்லை” என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவரது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.
கவுன்சிலர் ஜலால் களமிறங்கினார்.
தனது வாக்கைச் செலுத்த முடியாதோ என்று கவலையுடன் இருந்த அப்பெண், அந்தப் பகுதி மதிமுக கவுன்சிலர் மாமா ஜலால் அவர்களை அணுகினார். உடனே ஜலால், அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூத் எண் 5-க்குச் சென்று, அங்கு பணியாற்றும் பிரசீடிங் ஆபிசரிடம் உரத்த குரலில் விளக்கம் கேட்டார்:
“இந்தச் சகோதரியிடம் வாக்காளர் அட்டை, ஆதார், பூத்சிலிப் என அனைத்து ஆவணங்களும் உள்ளன. விரலில் மை இல்லை. கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகவில்லை. இன்னும் வாக்களிக்கவில்லை. அப்படியென்றால் வேறு யாரோ கள்ள ஓட்டுப் போட்டுள்ளார்களா? பதில் சொல்லுங்கள். இல்லையெனில் நான் இங்கிருந்து நகரமாட்டேன்”
எனக் கூறி, தரையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார்.
ஒருமுகமான ஆதரவு.
மதிமுக கவுன்சிலர் ஜலாலுக்கு ஆதரவாகத் திமுக பாக முகவர் விக்னேஷ் உடனடியாகக் களத்தில் இறங்கினார். அங்கிருந்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள், ஏஜென்டுகள் ஆகியோரும் ஜலாலின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விவரங்களைக் கேட்டனர்.
காவல்துறையினர் நிலைமை மோசமடையக் கூடாதெனக் கருதி, பிரசீடிங் ஆபிசரைத் தனது மேலதிகாரியிடம் பேசித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர்.
முடிவு: சேல்லேஞ்ச் வோட்டுக்கு அனுமதி.
பூத் ஆபிசர் உடனடியாக தனது மேலதிகாரியான ரிட்டர்னிங் ஆபிசர் (RO) அவர்களைத் தொடர்புகொண்டு பேசினார். நீண்ட விவாதத்திற்குப் பின், அந்தப் பெண்ணின் ஜனநாயக உரிமையைக் காக்க சல்லெஞ்ச் வோட் போட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, என்ஜிஓ காலனி பூத் எண் 5-ல் சல்லெஞ்ச் வோட் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
ஜலாலின் செயலுக்குப் பாராட்டு.
அந்தப் பெண் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், யாருக்கு வாக்களித்தார் என்பதெல்லாம் ஜலாலுக்குத் தெரியாது. இருந்தாலும், “துயரப்படும் தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும், தேடிச் சென்று உதவும் மக்கள் தலைவர் வைகோ வழியில்” செயல்பட்டு, அப்பெண்ணின் வாக்குரிமையைப் பாதுகாத்துள்ளார்.
“மக்கள் நமக்குத் தரும் பதவியையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதே மக்கள் பணி” – என்று துரை வைகோ அடிக்கடி கூறும் வார்த்தைகளைச் செயலாக்கிக் காட்டியுள்ளார் மாமா ஜலால்.
வாழ்த்துகள்
இந்த தரமான செயலுக்கு மதிமுக நிர்வாகிகள் முதல் பொதுமக்கள் வரை பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்தின் உயிர்நாடியான வாக்குரிமை மீட்கப்பட்ட இச்சம்பவம், சங்கரன்கோவில் தேர்தலை வரலாற்றுப் பக்கமாக மாற்றியுள்ளது.
செய்தி வெளியீடு:
கே.ஏ. மஸ்தான்
செயலாளர், மதிமுக
மானூர் ஊராட்சி, இராமையான்பட்டி
நெல்லை மாவட்டம்