Sat. Apr 25th, 2026

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த DSP ராமகிருஷ்ணன், திண்டுக்கலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24.04.2026) மாவட்ட நிர்வாகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் சரவணன் IAS மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திண்டுக்கல் காவல்துறை துணைத் தலைவர் சசி மோகன் IPS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் IPS உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர், DSP ராமகிருஷ்ணன் உடல் காவல்துறை மரியாதையுடன் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராமர், திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS