Sun. Apr 19th, 2026

குடியாத்தம், ஏப்ரல் 18:
குடியாத்தம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான செ.கு. தமிழரசன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரதாப் வெற்றி பெற பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குடியாத்தத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் பிரதாப் அவர்களுக்கு வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மாவட்ட பொருளாளர் கௌரிசங்கர், துணைத்தலைவர் ரமேஷ் குமார், மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார், மாவட்ட இனச் செயலாளர் தாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS