வேலூர், ஏப்ரல் 18:
வேலூர் மாவட்டம் உட்பட்ட கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியாரை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரம், கூட்டணித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் நல்லாசியுடனும், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அவர்களின் ஆதரவுடனும் நடைபெற்றது. கே.வி.குப்பம் தொகுதியின் கூட்டணி வேட்பாளராக ஜெகன் மூர்த்தியார் போட்டியிடுகிறார்.
பிரச்சாரத்திற்காக வந்த அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு புதிய நீதி கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல செயலாளர் பி. சரவணன், மாவட்ட செயலாளர் ஆர்.பி. செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சீனிவாசன், ராம இளங்கோவன், கண்ணையன், அம்பேத்கர் பேரவை மண்டலச் செயலாளர் நத்தம் நாகராஜ், நிர்வாகிகள் நரேஷ், விக்கி, மாணவர் அணி செயலாளர் ஹேமந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதோடு, NDA கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பிரச்சாரத்தை உற்சாகப்படுத்தினர்.
இந்த நிகழ்வு, கே.வி.குப்பம் தொகுதியில் தேர்தல் சூழலை தீவிரப்படுத்திய முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்