Thu. Apr 16th, 2026

கடலூர் மாவட்டம்; ஏப்ரல் 15:

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கியுள்ள திரு. துரை.கி. சரவணன் அவர்களுக்கு ஆதரவாக முக்கிய பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு. தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அதிகம் திரண்டிருந்த பகுதிகளில் நேரடியாக சென்று, கூட்டணியின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

அவர் தனது உரையில், சமூகநீதி, சமத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் அவசியம் எனக் கூறி, பொதுமக்களிடம் ஆதரவை கோரினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் அவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

புவனகிரி தொகுதியில் கூட்டணியின் பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சிவகுமார், சிதம்பரம் செய்தியாளர்.

By TN NEWS