🔥குடியாத்தம் அருகே சோகம்… 😢
👉 தாயுடன் மாடு மேய்க்க சென்ற 7 வயது சிறுவன்
👉 ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு
💔 மீட்டு கொண்டு சென்றும் உயிர் காப்பாற்ற முடியவில்லை
💔 குடும்பத்தையும் கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டிடம் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜீவிதா. இவர்களின் மகன் மதிரக்க்ஷன் (7), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று மாலை, தனது தாயுடன் அருகிலுள்ள ஏரிக்கு மாடு மேய்க்க சென்றபோது, சிறுவன் ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது தாயுடன் மாடு மேய்க்க சென்ற சிறுவன் உயிரிழந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே. வி. இராஜேந்திரன்
குடியாத்தம்
