Thu. Apr 9th, 2026

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பெ. பழனியப்பன், பொ. மல்லாபுரம் வினோபாஜி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

D. ராஜீவ் காந்தி

மண்டல செய்தியாளர்.

By TN NEWS