குடியாத்தம், ஏப்ரல் 4
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனித்தொகுதி தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் சிந்து இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை முன்னிட்டு, குடியாத்தம் காமராஜ் பாலம் அருகிலிருந்து செண்டை மேளம் முழங்க, உற்சாக ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வேட்பாளர் சென்றார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரான செல்வி சுபலட்சுமி அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட செயலாளர் வேல் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஹரி, நகர செயலாளர் டி. இளங்கோ, ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் வினோத் பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
✍️ செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
