குடியாத்தம், ஏப். 2:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சி இன்று மாலை குடியாத்தம் தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹானா தலைமை தாங்கினார்.
இதில், தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி, உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குடியாத்தம் செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்