வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்குட்பட்ட செதுக்கரை கிராமம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் – அவன்யா தம்பதியரின் மகன் விகாஸ் (20) என்பவர், கடந்த 25.03.2026 அன்று இரவு சுமார் 10 மணியளவில் மது போதையில் அசோக் நகர் பகுதியில் அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 26.03.2026 நள்ளிரவு நேரத்தில், குடியாத்தம் – பள்ளிகொண்டா சாலையில் உள்ள ஆர்.எஸ். ரோடு பகுதியில், படிப்பகம் அருகிலுள்ள மின்தூண் (டிரான்ஸ்பார்மர்) அருகே தூக்கிட்டு கொண்ட நிலையில் அவர் காணப்பட்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த விகாஸ் திருமணம் ஆகாதவர் என்பதும், அவருடைய உடன்பிறந்த சகோதரி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலையின் காரணங்களை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
(குறிப்பு: தற்கொலை எண்ணங்கள் தோன்றும் போது உடனடியாக அருகிலுள்ள நம்பகமான நபர்கள் அல்லது ஆலோசனை சேவைகளை அணுகுவது அவசியம்.)
K. V. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா
