Thu. Mar 26th, 2026

நாகர்கோவில், மார்ச் 25:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று (25.03.2026) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆர். ஸ்டாலின், இ.கா.ப., மற்றும் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு லலித்குமார், இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேருந்துகளில் அமைக்கப்பட்ட எல்.இ.டி திரைகளில் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை பார்வையிட்டு, பயணிகளிடையே பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான திரு மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தியாளர்:
Shalu V. J
தமிழ்நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்

By TN NEWS