Thu. Mar 26th, 2026

குடியாத்தம், மார்ச் 25:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35வது வார்டில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் வட்டச் செயலாளர் ஜெயமணி பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி கலந்து கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர். மூர்த்தி, நகர கழக இணை செயலாளர் அமுதா கருணா, முன்னாள் நகர செயலாளர் சேவல் நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.

இதில் வார்டு கழக நிர்வாகிகள் இ.டி. பாஸ்கர், ஆர். செல்வம், இ.ஆர். மேகநாதன், கே.வி. ராஜேந்திரன், மூர்த்தி, அக்பர் ஷெரிப், ஜெகதீசன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக கௌதமி நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா

By TN NEWS