Fri. Mar 13th, 2026

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை

அரியலூர், மார்ச் 12

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்காவிற்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் வெறிநாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி – அன்பின் செல்வன் என்பவர்களுக்கு சொந்தமான சுமார் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. அந்த நேரத்தில் 20க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டமாக தாக்கியதால் பல ஆடுகள் கடுமையாக காயமடைந்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆசிரியர்.

By TN NEWS