Sat. Feb 28th, 2026

🌾 மகாராஷ்டிராவில் ‘ரஜினிகாந்த் கிராமம்’ – ஒரு உணர்ச்சி பூர்வமான கதை

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அவர் வெறும் நடிகர் அல்ல…?

அவர்களுடைய வீட்டுப் பிள்ளை.

📍 எங்கு உள்ளது இந்த ‘ரஜினிகாந்த் கிராமம்’?

புனே அருகே, சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள Mavadi Kadepathar என்ற கிராமமே இது. அங்குள்ள மக்கள் தங்கள் கிராமத்தை அன்புடன் “ரஜினிகாந்த் கிராமம்” என்று அழைக்கிறார்கள்.
அவர்களுக்கு ரஜினிகாந்த் என்ற பெயர் அல்ல முக்கியம்
“சிவாஜிராவ் கெய்க்வாட்” தான் அவர்களின் பெருமை.

🧬 என்ன தொடர்பு?

ரஜினிகாந்தின் தாத்தா இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பம் பிழைப்புத் தேடி கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தது.

பின்னர் ரஜினிகாந்த் பெங்களூருவில் பிறந்தார்.

ஆனால், “அவர் எங்கள் மண்ணின் ரத்தம்” என்ற உணர்வு அந்த கிராம மக்களிடம் இன்றும் ஆழமாக இருக்கிறது.

இன்றும் அந்த கிராமத்தில் “கெய்க்வாட்” குடும்பப் பெயருடன் பலர் வாழ்கிறார்கள் என்பது அவர்களின் பெருமை.

🤝 சந்திப்பு – மராத்தி பேசும் சூப்பர் ஸ்டார்

அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க முயன்றுள்ளனர்.
ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் முடியாமல் போனாலும், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் காத்திருந்து சந்தித்துள்ளனர்.

அவர்கள் ஹிந்தியில் பேசத் தொடங்கியபோது,
ரஜினிகாந்த் அவர்களிடம் மராத்தியில் பேசச் சொல்லியுள்ளார்.

அவர் சரளமாக மராத்தி பேசியதை கண்டு, கிராம மக்கள் பெருமிதத்துடன் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

📖 2013 அழைப்பு

2013-ல் சாஸ்வத் பகுதியில் நடைபெற்ற மராத்தி இலக்கிய நிகழ்ச்சிக்கு அவரை அழைத்துள்ளனர்.
ஆனால் அவரின் அட்டவணை காரணமாக அது சாத்தியமாகவில்லை.

❤️ கிராம மக்களின் ஆசை என்ன?

அவர்கள் எந்த உதவியும் எதிர்பார்ப்பதில்லை.
ஒரே ஆசை…?
“ஒரு நாள் எங்கள் மண்ணில் அவர் வந்து நின்றால் போதும்.”

மொழிகளையும் மாநில எல்லைகளையும் தாண்டி கோடிக்கணக்கான இதயங்களை வென்ற ரஜினிகாந்த்,
ஒருநாள் நிச்சயம் தங்கள் கிராமத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையோடு
Mavadi Kadepathar மக்கள் இன்றும் காத்திருக்கிறார்கள்.

ஷேக் முகைதீன்.

By TN NEWS