தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள்.
Dindigul: திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் வசித்து வரும் விரா வெள்ளாசாமி (வயது 24) கடந்த மூன்று நாட்களாக மாயமாகியுள்ளார்.
வாய் பேச முடியாததும், இரு காதுகளும் கேட்காத மாற்றுத்திறனாளியான இவர், “வேலைக்கு சென்று வருகிறேன்” என்று கூறி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை. தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 94454 40868 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
