Sat. Feb 28th, 2026

மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு.

Dindigul: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெற்றது.

கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், S. Jothimani (கரூர் பாராளுமன்ற உறுப்பினர்), வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு, நிதி பயன்பாடு மற்றும் முன்னேற்ற நிலை குறித்து விளக்கமளித்தனர்.

கூட்டத்தில் குடிநீர், சாலை, வீடமைப்பு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்

By TN NEWS