Sun. Feb 15th, 2026

குடியாத்தம், பிப்.14 :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில்,
சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

இன்று காலை சுமார் 7 மணி அளவில்,
ஏரியில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,
காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, பொதுமக்கள் ஏரியில் இருந்து அம்மன் சிலையை மீட்டு,
சிலையை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

பின்னர், அந்த அம்மன் சிலை
வட்டாட்சியர் கே. பழனி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது,
மேற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்,
நெல்லூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை
ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை,
பகுதி மக்களிடையே ஆன்மிக உணர்வையும் பக்தி எழுச்சியையும் ஏற்படுத்தியது.

செய்தியாளர் :
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா

 

 

 

 

By TN NEWS