Sun. Jan 11th, 2026

வேலூர் மாவட்டம்

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் இன்று நடைபெற்ற ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை புரிந்தார்.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவரை வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சுப்புலட்சுமி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா அனந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் பொன் விழா நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர்
மாவட்ட செய்தியாளர்
T. தென்பாண்டியன்


By TN NEWS