திருப்பதி | டிசம்பர் 25, 2025:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் புதிதாக பக்தர்கள் நிற்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது.
25.12.2025 (வியாழக்கிழமை) இரவு 8 மணி நிலவரப்படி, கூட்டத்தின் அளவு கட்டுப்பாட்டை மீறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கூட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு, நாளை காலை 6 மணிக்கு பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலைப்படி, கியூ வரிசையில் கடைசியாக நிற்கும் பக்தர், சுமார் 30 மணி நேரம் கழித்தே ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் அதிகரிக்க காரணங்கள்:
அரையாண்டு பரீட்சை விடுமுறை
கிறிஸ்மஸ் பண்டிகை
ஆங்கில புத்தாண்டு நெருங்கும் காலம்
இதன் காரணமாக, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்களுக்கு அறிவுரை:
திருப்பதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள்,
குளிர் காலநிலை,
அதிக கூட்ட நெரிசல்,
நீண்ட காத்திருப்பு நேரம்
ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் தங்கள் பயணத்தை தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்.




