கள்ளக்குறிச்சி மாவட்டம்
(24.12.2025)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களில் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வருகிற 26-ஆம் தேதி,
தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை ஊராட்சியில் முதலமைச்சரை வரவேற்கும் இடம்,
ஏமப்பேரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்பட உள்ள இடம்,
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள இடம்,
விழா மேடை மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள்.
ஆகிய இடங்களில், திமுக மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, M.A., அவர்களின் தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம். எஸ். பிரசாந்த், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில்,
சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
மேலும், பொதுமக்கள் பங்கேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, அடிப்படை வசதிகள், விழா மேடை அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆய்வு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. மலையரசன், எம்.பி. கலந்து கொண்டு, நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

