சென்னை, புழல் | 20.12.2025
சென்னை அடுத்த செங்குன்றம் அருகே சோத்துப்பாக்கம் ஜெய துர்கா நகர் பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் சதுர்த்தியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் விழா விமரிசையாக நடைபெற்றது.
ஜெய துர்கா நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. ஆஞ்சநேயருக்கு மலர்களாலும் வஸ்திரங்களாலும் செய்யப்பட்ட அலங்காரம் பக்தர்களை பெரிதும் ஈர்த்தது.
பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த ஆலயத்திற்கு சென்னை மட்டுமின்றி, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவதாக ஆலய குருக்கள் தெரிவித்தனர். இங்கு பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் அவர்கள் கூறினர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மனநிறைவடைந்தனர்.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர்
எம். யாசர் அலி