Fri. Dec 19th, 2025


சென்னை மாவட்டம் | 09.12.2025

வியாசர்பாடி பி.வி. காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியம் (47) என்பவர், வியாசர்பாடி அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில், அவரது கடைக்கு வந்த மோகன் (49) என்பவர் மசாலா முட்டை கேட்டுள்ளார். உணவு வழங்கப்பட்ட பின்னர், விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அந்த வழியாக வந்த பாக்கியத்தின் உறவினரான தமிழ்வாணன் (48) தகராறை தடுக்க முயன்ற போது, அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் தமிழ்வாணன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் உடனடியாக
ஸ்டான்லி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தலையில் உள் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

🚨 போலீஸார் நடவடிக்கை:

இது தொடர்பாக பாக்கியம் அளித்த புகாரின் பேரில்
எம்.கே.பி நகர் காவல் நிலையம்
போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

⚠️ பொதுமக்களிடம் காவல்துறையின் வேண்டுகோள்:

சிறு தகராறுகள் கூட எதிர்பாராத உயிர் அபாயமாக மாறும் நிலை உருவாகி வருவதால்,பொதுமக்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும்,சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர்: எம். யாசர் அலி

By TN NEWS