Sat. Dec 20th, 2025


டிசம்பர் 3
வேலூர் மாவட்டம் – குடியாத்தம்



குடியாத்தம் வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் வளாகத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.12.2025) புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகர தீபம் ஏற்றப்பட்டது.

மகர தீபம் ஏற்றப்பட்ட வேளையில் “அரோகரா! அரோகரா!” என பக்தர்கள் முழக்கத்தால் கோயில் முழுவதும் ஆன்மீக சூழல் பரவியது.

கோயில் நிர்வாகிகள் S. சிவகுமார், கோயில் நிர்வாக மேலாளர் D. சங்கர்,  கோயில் ஊழியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் ஆகியோர் பங்கேற்று மகர தீப தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது

விழா நிறைவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS